#5 கம்பன் எளிய தமிழில்
.
சினத்தில் சீறும் பெரியோர் சொல்
கணத்தில் சேரும் சிறியோர் மேல்
தளைத்த ஏழு மராமரந்தனை
துளைத்துப் போன அம்பினை
தொடுத்த தோளன் வில்லாளன்
வனத்தில் வாழ்ந்த வல்லாளன்
காப்பிய நாயகன் பெருங்கதையை
காப்பியமாக்கினான் வால்மீகி
கவியில் சிறந்தோன் கவித்திறனோ
புவியில் சிறந்த புதினமன்றோ
பொலிவில் குறைந்த சொல் கொண்டு
மலிவில் விளைந்த வார்த்தைகளால்
சீதை ராமன் புகழ்பாடும்
காதை சொல்ல யான்விழைந்தேன்
.
பாயிரம் #5
நொய்தின் நொய்ய சொல் நூற்கலுற்றேன் எனை!
வைத வைவின் மராமரம் ஏழ் துளை
எய்த எய்தவற்கு எய்திய மாக்கதை
செய்த செய் தவன் சொல் நின்ற தேயத்தே.
.
#வாஞ்சிவரிகள்#
No comments:
Post a Comment