#45 கம்பன் எளிய தமிழில்
.
கோசல நாட்டு
சோலைக்குள்ளே
புண்ணை மரங்கள்
பூத்துக் குலுங்க
கூவும் குயில்கள்
கூடிக் களிக்க
மண்டிக் கிடக்கும்
மாமரக் கிளையில்
வண்ண மயில்கள்
வளைந்தாடும் காட்சி
ஆடல் அரங்கில்
பாடல் பதமொடு
பயின்று ஆடும்
வஞ்சி நடனம்
விஞ்சி இருக்கும்
.
தடாகத்தில்
தழைத்து மலரும்
தாமரை மலரின்
தங்க படுக்கையில்
விரிந்த சிறகை
சுருக்கி இழுத்து
உறங்கிக் கிடக்கும்
குளத்து அன்னம்
குதித்து துயிலெழ
மலர்த்தேன் மண்டிய
இசைக்கும் வண்டுகள்
போதை தெளியா
பேதை போலே
காலையில் பாடும்
பூபாளம் மறந்து
மாலையில் பாடும்
செவ்வழி பாடிடும்
செழிப்புடை மருதம் !!!!
.
#வாஞ்சிவரிகள்#
No comments:
Post a Comment