Wednesday, August 2, 2017

#11 கம்பன் எளிய தமிழில்

#11 கம்பன் எளிய தமிழில்
.
பாடல் #11
.
கழனியில் தோன்றும் களையினை களைய
கடவுளின் தூதாய் ஜகத்தினில் ஜனித்து
நெறி தவறா நேர்மையாய் வாழ்ந்து
அறிவால் ஆன்றோர் ஆசி பெற்று
.
கடுந்தவ மேற்றி கடவுளை உருக்கி
நெடுநாள் வாழும் நற்றவம் பெற்று
கொடுங்கோலால் மக்களை கொன்று
அடக்கி ஆளும் அரக்கரை அழிக்க
திருமால் தரித்த திருஅவதாரம்
பெருமான் உதித்த பேரவதாரம்
ஜனகனின் வில்லுடைத்த இராமாவதாரம்
ஜகத்தினில் உயரந்ததன்றோ
.
செறிந்த செய்யுளும் உயர்ந்த உவமையும்
தெளிந்த நடையும் துள்ளும் தொடையும்
இணைந்த இராம காப்பியம்
கொடுத்து சிவந்த கைகொண்ட
சடையப்ப வள்ளல் செல்வச் செழிப்பில்
வளமாய் வாழ்ந்த திருவெண்ணெய் நல்லூரின்
திண்ணையில் அமர்ந்து இறைவன் அருளால்
உன்னதமாய் உதித்து உருப்பெற்றது
.
.
நடையின்நின்று உயர் நாயகன்தோற்றத்தின்
இடை நிகழ்ந்த இராமாவதாரப் பேர்த்
தொடை நிரம்பிய தோம் அறுமாக்கதை

சடையன் வெண்ணெய்நல்லூர்வயின்தந்ததே.

No comments:

Post a Comment

அமெரிக்காவில் வாங்கிய இடம்

  தலைப்பு: அமெரிக்காவில் வாங்கிய இடம்   ஹூஸ்டன் நகரம். அழகான அமைதியான பகல் பொழுது. எத்தனையோ ஹரிக்கேன்களையும் வெள்ளங்களையும் பார்த்துவிட்டு அ...